கடலில்தான் முத்து கிடைக்குமாம்..! ஆனால் மழை வேண்டி வானம் பார்த்திருக்கும் தேனி மாவட்டத்திலும் ஒரு முத்து கிடைத்தது. ஆம் இரு விலையுயர்ந்த கற்கள் ஒன்றாக சேர்ந்து வடுகபட்டியில் வைரமுத்தானது. பாரதிக்கு பின் தமிழை நேசித்த கவிஞனும் இவரே, தமிழ் நேசித்த கவிஞரும் இவரே..
இன்றைய பிறந்த நாள் நாயகன் கவிப்பேரரசு அவர்களுக்கு இத்தளத்தின் முதல் பதிவாக நான் எழுதும் இந்த வாழ்த்துப்பதிவை பரிசாக வழங்குகின்றேன்.
பாடல்கள், கவிதைகள், இசை, பாடகர்கள், பாடகிகள் என திரை இசை, குரலிசை உள்ளிட்ட அனைத்து இசைகள் பற்றியதான என் பார்வைகளை இத்தளத்தின் ஊடாக உங்களிடத்தில் முன்வைக்கவுள்ளேன்...
அந்த வகையில் இன்றைய முதல் பதிவாக வரும் இப்பதிவு பிறந்த நாள் நாயகன் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் கவிதையை கொண்டு வருகின்றது.
காதலுடன் சங்கமித்திருக்கும் நம் வாழ்க்கையில் காதல் இல்லாமல் கவியா?? பாடலா?? ஏன் ஒரு பதிவா??
ஆகவே கவிபேரரசின் தாஜ்மஹாலில் ஒரு கவியரங்கம் என்ன கவிதையின் ஒலி வடிவம் உங்களுக்காக.. கவிபேரரசின் கம்பீர குரலில்...
முதலில் கவிதை கேட்க முன் நீங்கள் கேட்டு ரசித்து கொண்டிருக்கும் ஜே FMன் ஒலிபரப்பை சற்று நேரம் நிறுத்திக் கொள்ளுங்கள்..
இதோ கவியரங்கின் கம்பீரம்..
Featured Posts
Tuesday, July 12, 2011
Subscribe to:
Posts (Atom)